2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினரால் மட்டுமே முடியும்’

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

வடக்கில் போதைப் பொருள் பாவணை அதிகரித்துக் கொண்டு வருவதாகத் தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, போதைப்பொருள் வியாபாரத்தை இராணுவத்தினரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியுமெனவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கில், போதைப்பொருளைக் கட்டுப்படுத்த சகல படைத் தரப்பினரையும் ஒன்றிணைத்து விரைவான செய்பாட்டை முன்னெடுக்க வேண்டுமென்றார்.

இளம் சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர், அதைவிடுத்து, வேறு எங்கு இராணுவ ஆட்சி உள்ளதென்பது தெரியவில்லையெனவும் கூறினார்.

அத்துடன், பிரதமரின் 50ஆவது ஆண்டு அரசியல் பயணத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளாரெனவும் இது கூட்டமைப்பின் அரசியல் நாடகமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X