Princiya Dixci / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தாயாரால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு, நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று (21) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி, 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தாயாரின் பாதுகாப்பிலிருந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் சிறுமி முற்படுத்தப்பட்ட போது, அவரை சிறுவர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
10 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago