2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

போதைமாத்திரை, பணத்துடன் வசமாக சிக்கிய இளைஞன்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்ப்பாணம் - கோண்டாவில், வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள், அவற்றை விற்பனை செய்து அதன்மூலம் பெற்றுக்கொண்ட பணத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார்  23 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவரது உடமையில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரை, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் பெற்றுக்கொண்ட பணம் என்பவற்றை மீட்டனர்.

அதனை அடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X