Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையில் மது போதையில் வந்து விசாரணைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலையை சேர்ந்த குறித்த பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர், அவரின் சகோதரியின் மகனுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு வந்து, பார்வையாளராக அமர்ந்திருந்துள்ளார்.
இதன்போது, அவர் வைத்திருந்த திறப்பு ஒன்று கீழே விழுந்து அதிக சத்தம் எழுப்பியுள்ளது. அதன்போது அருகில் நின்ற நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் அங்கு சென்று திறப்பை எடுக்க முற்பட்ட போது, மது வாடை வீசியுள்ளதையடுத்து அவரை அழைத்து விசாரித்தபோது அவர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது தெரிய வந்ததுள்ளது.
பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியபோது, அவரை செவ்வாய்க்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (05) நீதிமன்றில் மீண்டும் முற்படுத்தப்பட்போது மருத்துவ அறிக்கையிலும் அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவித்த நீதிவான், 2024 பெப்ரவரி 22ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
எஸ். தில்லைநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago