Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
மதுபோதையில் வாகனம் செலுத்திய 9 சாரதிகளுக்கு 1 இலட்சத்து 9,500 ரூபாய் அபராதம் விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதிஸ்தரன், இன்று (13) உத்தரவிட்டார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், மது போதையில் வாகனம் செலுத்திய குற்றசாட்டின் கீழ் 09 பேரை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிஸார் முற்படுத்தினர்.
இதன்போது 7 பேருக்கு எதிராக, சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியக் குற்றச்சாட்டில், தலா 13,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், இருவருக்கு எதிராக மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில், 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேவேளை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் பொதுஇடத்தில் மது அருந்திய நால்வருக்கு, தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago