2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

போராட்டக் களத்தில் பாடசாலை மாணவன்

Niroshini   / 2021 ஜனவரி 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், இடித்தழிக்கப்பட்டமையைக் கண்டித்து, பல்கழைக்கழக மாணவர்களால் முன்னெடுத்துவரும்  உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில், பாடசாலை மாணவன் ஒருவரும் கலந்துகொண்டார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே, இவ்வாறு இந்தப் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில், இன்று (10) கலந்துகொண்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டம், இன்று (10) 2ஆவது நாளாகவும் தொடர்ந்தது.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்க வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார், இராணுவத்தினர் விலகவேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில்,  மாணவர்களால், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை (8) இரவு இடித்தழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .