2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘போராட்டத்துக்கு வடக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நாட்டில் ஏற்பட்டுள்ள வரிச்சுமை, எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணிகளுக்கு எதிராக பாரிய போராட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, அதற்கு வட பகுதி மக்களின் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று (20) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இப்புதிய அரசாங்கம் ஆட்சிக்கு மக்களுக்கு மானியத்தை பெற்றுக்கொடுப்பதாகவும், துன்பங்களை நீக்குவதாகவும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதாகவுமே கூறியே ஆட்சிக்கு வந்திருந்தது.

“ஆனால் இந்த அரசாங்கம், ஆட்சிக்கு வந்து மூன்றான்டுகளில் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வரிச் சுமையும் விலையேற்றமுமே கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் இம் மூன்றாண்டுகளாக தமது இருப்பை தக்கவைப்பதற்காக மக்களை வதைக்கின்ற அரசாங்கமாகவே இவ் அரசாங்கம் காணப்படுகின்றது.

“குறிப்பாக, கடந்த சில மாதங்களில் மூன்று தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவைகள் பஸ் கட்ணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏனைய சேவைகளின் விலையேற்றமும் அதிகரித்துள்ளது.

“எனவே, இதற்கு எதிராக உண்மையான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பில் மாபெரும் மக்கள் போராட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளோம்.

“அதற்கு வட பகுதி மக்களும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X