2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

போலி நாணயத்தாளுடன் பெண் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்

போலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டக் குற்றச்சாட்டில், பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி இலங்கை வங்கிக் கிளையில், நேற்று (10) காலை ஆயிரம் ரூபாய் பெறுமதியிடப்பட்ட 3 போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட போதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்தவரெனத் தெரிவித்த பொலிஸார், அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அந்தப் போலி நாணயத்தாள்கள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பன தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால் மேலதிக விவரங்களை வழங்க முடியாது என்று, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X