2025 ஜூலை 16, புதன்கிழமை

முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கிடையில் காணப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வந்தது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த சில நாட்களாக முருங்கன் முச்சக்கரவண்டிச் சங்கத்தினருக்கும், முசலிப் பிரதேச முச்சக்கரவண்டி சங்கத்தினருக்கும் இடையில் ஏற்படிருந்த முறுகல் நிலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (19),  நாட்டான் பிரதேசசபை  மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில், சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டது.

இப்பிரச்சினை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலையிட்டு முடிவுக்குக் கொண்டு வந்தார். கடந்த காலங்களில் இரு சங்கத்தினருக்கு இடையில் காணப்பட்ட அடாவடித்தனமான செயற்பாடுகளே இந்த முரண்பாடுகளுக்கு காரணமாக அமைந்தன. கடந்த வாரம் இப்பிரச்சினை  மேலும் முற்றி கைகலப்பாக மாறியதால், பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில், வடமாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன்,நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர், முசலி பிரதேசசபையின் செயலாளர், முருங்கன் பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி, சிலாவத்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X