Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கரைச்சிக் கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்;துடன் தொடர்;புபட்ட மூன்று சந்தேகநபர்களை தலா ஐம்பதாயிரம் ரூபாய் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணைகளிலும் செல்லுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி கல்விக் கோட்டத்துகுட்பட்ட ஸ்கந்தபுரம் இல-2 பாடசாலை அதிபரின் கைத்தொலைபேசி, கடந்த மாதம் பாடசாலை நேரத்தில் காணாமல் போன சம்பவத்தை தொடர்ந்து மேற்படி பாடசாலையில் கல்வி கற்றுவரும் தரம் 06 வகுப்பினைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்;த தரம் 09 மாணவர்கள் இருவர் தாக்கியதில் குறித்த மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 27ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸார் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் தரம் 09 வகுப்பைச் சேர்ந்த இரு மாணவர்;களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்;திருந்தனர். மேலும், கடந்த 9 ஆம் திகதி மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரியினாலும் மாணவர்கள் பாதிக்;கப்பட்டமை தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்;டிருந்தது.
இதனையடுத்து குறித்த பாடசாலை அதிபரையும் இரு மாணவர்;களையும் கடந்த 16ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்த போதும் குறித்த தினத்தில் மூவரும் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இவர்களை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார், திங்கட்கிழமை (21) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அதிபரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையிலும் இரு மாணவர்;களையும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணைகளில் செல்ல அனுமதியளித்துள்ளார்.
12 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
37 minute ago