2025 ஜூலை 23, புதன்கிழமை

மாணவர்கள் மீது தாக்குதல்; அதிபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

தனது அலைபேசியை திருடியதாகக் கூறி, 6ஆம் தர மாணவர்கள் மீது 9ஆம் தர மாணவர்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஸ்கந்தபுரத்திலுள்ள பிரபல தமிழ் பாடசாலை அதிபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் நான்கு பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அதிபர் மற்றும் தாக்குதல் மேற்கொண்ட மாணவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் அதிபர், மாணவர்களை இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என நீதவான் புதன்கிழமை (09) உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், இன்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதிபரோ தாக்குதல் மேற்கொண்ட மாணவர்களோ மன்றில் ஆஜராகாததையடுத்து, எதிர்வரும் 21ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன், அத்தினத்தில் அதிபரையும் மாணவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .