2025 ஜூலை 05, சனிக்கிழமை

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து இரண்டாவது நாளாகப் போராட்டம்

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாக கடந்த 29ஆம் திகதி, உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து, யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், இரண்டாவது நாளாக நேற்று திங்கட்கிழமை (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமாகிய போராட்டம், ஊர்வலமாகச் சென்று கண்டி - யாழ்ப்பாணம் வீதியை அடைந்ததுடன், அங்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

'ஆட்சியாளர்களே மாணவர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து', 'நல்லாட்சி எங்கே?', 'மாணவர்களுக்கு நீதி வேண்டும்'ஆகிய சுலோகங்களை தாங்கியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .