2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மாணவர்கள் மீதான துப்பாக்கிப்பிரயோகம்: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

George   / 2017 ஜனவரி 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, யாழ்.பொலிஸார் ஐவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணையானது, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவின் முழுமையாக விசாரணை அறிக்கை கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கின்போதும் மன்றில் சமர்ப்பிக்கப்படாமையால் குற்றப்புலனாய்வு பிரிவினர்,

இவ்வழக்கை திசை திருப்ப முயல்கின்றனரா? என யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கமைய இன்று, இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸார் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இடையூறு விளைவிக்கப்படமாட்டாது என நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக பொலிஸாரால் தமக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சட்டத்தரணியூடாக நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இதனையடுத்து முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அடுத்த வழக்கு தவணையின் போது நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என நீதவான் கடந்த வழக்கு தவணையின் போது உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய பொலிஸார் தம்மால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இடையூறு விளைவிக்கப்படமாட்டாது என நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் ஐவரின் விளக்கமறியலை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீடித்து நீதவான் இன்று உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X