2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மின்னொழுக்கினால் வீடு முற்றாக சேதம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், புங்கங்குளம், அரியாலை பகுதியில் திங்கட்கிழமை இரவு 11:30க்கு திடீரென ஏற்பட்ட மின்னொழுக்கினால் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த அணைவரும் நித்திரையில் இருந்த நேரம் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. எனினும், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகரசபையின் தீயனைப்புப் பிரிவின் வாகனம் உட்செல்ல முடியாதவாறு குறித்த வீடு அமைந்திருந்த வீதியிருந்தமையினால் தீயினைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனப் பொலிஸார் கூறினர்.

இதன் காரணமாக வீடு முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த பெறுமதியான சொத்துக்கள் அனைத்தும் முற்றாக அழிவடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், அனர்த்தம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X