2025 ஜூலை 23, புதன்கிழமை

மானிய உரம் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் சிரமம்

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் உரிய காலத்தில் மானிய உரங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2015ஆம் - 2016ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, இரண்டு மாதங்களை கடந்த நிலையில் உரிய காலங்களில் மானிய உரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பயிர்ச்செய்கை மேற்கொள்ளும்போது பாவிக்க வேண்டிய அடிக்கட்டு பசளை உள்ளிட்ட உரங்களை காலம் தாழ்த்தி வழங்கப்படுவதுடன்,இரண்டாம் கட்ட உர விநியோகமும் காலம் தாழ்த்தியே வழங்கப்படுவதாகவும், இதனால் அதிகூடிய விலைகளில் தனியார் கடைகளில் உரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

350 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளவேண்டிய மானிய உரத்தை தனியார் கடைகளில் 1,300 ரூபாய் தொடக்கம் 1,400 ரூபாய் வரையில் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மானிய உரம் தவிர்ந்த மேலதிக தேவைகளுக்கான உரத்தினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, தனியார் வர்த்தக நிலையங்களில் உரத்துக்கான கட்டுப்பாட்டு விலைக்கு அதிகூடிய விலைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டபோதும் அதனைமீறி,அதிகூடிய விலைகளிலேயே உர விற்பனை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .