2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மூன்று முறை சொல்பேச்சு கேட்காதவருக்கு 6 மாதங்கள் சிறை

George   / 2016 ஜூன் 14 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொடர்ந்து நான்காவது தடவையாக போக்குவரத்து விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புன்னாலைக் கட்டுவன் பகுதியைச் சேர்ந்த வான் சாரதிக்கு 6 மாதகாலச் சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், திங்கட்கிழமை (13) தீர்ப்பளித்தார்.

மேற்படி நபர், மதுபோதையில், உறுதிப்பத்திரங்கள் இல்லாமல் வாகனம் செலுத்திய குற்றத்துக்காக மல்லாகம் நீதிமன்றத்தால் ஏற்கெனவே மூன்று தடவைகள் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) அனுமதிப்பத்திரங்கள் எவையுமின்றி, மதுபோதையில் வான் செலுத்திச் சென்றபோது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X