2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மாற்றுத் திறனாளிகளுக்கான நிலுவை கொடுப்பனவு கையளிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தால் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3000 ரூபாய் கொடுப்பனவில் இவ்வருடம் வழங்கப்படாத ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களுக்குரிய கொடுப்பனவு தற்போது மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வருடத்தில் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களை தவிர்த்து ஏனைய மாதங்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு மாவட்ட செயலாளர்களினால் சமூக சேவைகள் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, மாற்றுத்திறனாளிகளுக்கான நிலுவைப் பணம் கையளிக்கப்பட்டதாக  சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X