Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கு 2016ஆம் ஆண்டில் 1,121.71 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளதாக மாவட்ட செயலகப்புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1983ஆம் ஆண்டு முதல் கடந்த 2009ஆம் ஆண்டு வரை நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, வட பகுதியில் சகல கட்டுமானங்களிலும் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து மக்கள் மீள் குடியேற்றப்படுவதையடுத்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்;திலுள்ள துணுக்காய் கல்வி வலயம் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயம் ஆகிய இரு கல்வி வலயங்களிலும் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்படி இரு கல்வி வலயங்களின் கீழுள்ள பாடசாலைகளின் உடனடி அபிவிருத்திக்கு, 1121.71 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளதாக மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள 31 பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 425.21 மில்லியன் ரூபாயும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 24 பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்கு 340.8 மில்லியன் ரூபாயும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள 18 பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்;கு 132 மில்லியன் ரூபாயும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஒன்பது பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 58 மில்லியன் ரூபாயும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள எட்டுப்பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்கு 94.7 மில்;லியன் ரூபாயும் மணலாறு (வெலிஓயா) பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள ஏழு பாடசாலைகளின் அபிவிருத்திப்பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாயும் உடனடித் தேவையாகவுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றை விட கல்வியின் ஏனைய அபிவிருத்திப் பணிகளுக்கு மேலும் பல மில்லியன் ரூபாயும் நிதி தேவையாக உள்ளதாகவும் துறைசார்ந்த அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago