Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 06 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்,ரொமேஸ் மதுசங்க
முல்லைத்தீவு, வட்டுவாகலைச் சேர்ந்த மீனவர்களின் படகை இடித்து அவர்களை கடலில் மூழ்கடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேரையும் நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைத்திருந்து, 9ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்தார்.
வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த சேகர் ரஞ்சித்குமார் (வயது 36) மற்றும் ம.அலெக்ஸ் (வயது 30) ஆகியோர் திங்கட்கிழமை (04) அதிகாலை கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, முல்லைத்தீவு கடலில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட றோலர் படகு ஒன்று இவர்களின் படகை மோதியுள்ளது.
இதனால், படகு கடலில் மூழ்கடிக்கப்பட்டு இரு மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, அங்கு சென்ற முல்லைத்தீவு மீனவர்கள் அந்த இருவரையும் மீட்டதுடன், அவர்களின் படகை மோதிய இந்திய றோலரை மடக்கிப் பிடித்தது அதில் 8 இந்திய மீனவர்களையும் கரைக்குக் கொண்டு வந்தனர்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்ததையடுத்து, அவர்கள் அவ்விடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து 8 இந்திய மீனவர்களையும் கைது செய்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது, கடற்கொந்தளிப்பு காரணமாகவே தங்கள் றோலரின் இயந்திரம் பழுதடைந்து, இலங்கை மீனவர்களின் படகு மீது மோதியது என இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதவான்,மீனவர்களை விடுவித்ததுடன் அவர்களின் றோலரில் இருந்த மீன்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.
51 minute ago
56 minute ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
56 minute ago
01 Oct 2025