2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மீள் நிரப்பு அட்டைகளைத் திருடி பயன்படுத்திய இருவர் கைது

Gavitha   / 2016 ஜனவரி 04 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மாதகல் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்துக்குள் நுழைந்து,  அங்கிருந்த அலைபேசி மீள் நிரப்பு அட்டைகளை திருடிய இருவரை, இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளனர்.

கைதான இருவரும், மாதகல் மற்றும் மானிப்பாய் பகுதிகளையச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய நபர்கள் என்று பொலிஸார் கூறினர்.

கடந்த நவம்பர் மாதம் இரவு, மாதகல் பகுதியிலுள்ள குறித்த வர்த்தக நிலையத்துக்குள், கூரையைப் பிரித்துக்கொண்டு நுழைந்த இருவரும், பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசி மீள்நிரப்பு அட்டைகளைத் திருடிச் சென்றிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த மீள் நிரப்பு அட்டையின் தொடர் இலக்கங்களை கண்டறிந்த பொலிஸார், மீள்நிரப்பு அட்டை
நிறுவனத்தினூடாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, குறித்த மீள் நிரப்பு அட்டைகளைத் திருடிய இருவரும் தங்களுடைய அலைபேசியில் மீள்நிர்ப்பு அட்டைகளை பாவித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.  

கைதான இருவரையும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X