2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நாளை முதல் அனுஷ்டிப்பு

George   / 2016 மே 11 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

1948 ஆம் ஆண்டு முதல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவரையும் நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 18 ஆம் திகதி புதன்கிழமை வரையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்;ப்பாணம் ஊடக அமையத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்து கூறுகையில், 'யாழ்;ப்பாணத்தில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில் நாளை வியாழக்கிழமை (12) நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளோம். கிழக்கில் வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றவுள்ளோம்.

தொடர்ந்து, எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை முள்ளிவாய்க்காலில் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் அஞ்சலி செய்யவுள்ளோம். அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரையில் ஆலயங்களிலும் அஞ்சலி நிகழ்வுகளை நடத்தவுள்ளோம். தமிழ் மக்களுக்கு நீதியை வென்றெடுப்பதற்கும், நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதைக் காட்டவும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன' என்றார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X