2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மொழிக் கற்கைகள் கூடம் அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், கோப்பாயில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியில் மொழிக் கற்கைக்கூடம் நேற்று வியாழக்கிழமை  இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்காவால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின்; ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ்.இராதகிருஸ்ணன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களின் மொழி விருத்தியை மேம்படுத்தும் வகையில் இந்த கற்கைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X