2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முழங்காவிலில் இருபது ஏக்கர் காணி கையளிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, முழங்காவிலில் சுமன் பண்ணை அமைத்திருந்த இருபது ஏக்கர் காணியை, இராணுவத்தினர் திங்கட்கிழமை (22) பூநகரி பிரதேச செயலகத்திடம் கையளித்துள்ளதாக பூநகரிப் பிரதேச செயலாளர் ச.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.

மேலும், காணி உரிமையாளர்கள் காணியை உரிமை கோருகின்றபோது, அக்காணியை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி பண்ணையானது கடந்த காலத்தில் பிரதேச செயலாளரினால் நடுத்தர வகுப்பினரான 10 நபர்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் அந்தக் காணிகள் பராமரிக்கப்படாமையால் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தம்வசம் எடுத்து 'சுமன்' என்ற பெயரில் விவசாயப் பண்ணையை நடத்தி வந்தனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினர் அந்தப் பண்ணையை கையகப்படுத்தி விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X