Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 04 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு எனக்கூறி சிலர் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிரந்தர பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர். ஆனால், முஸ்லிம் மக்களை முழுமையாக இந்த மண்ணில் இருந்து அகற்றும் எண்ணம் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்ததில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
'2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு மற்றும் கிழக்கு என்பது முஸ்லிம் மக்களுக்கும் உரிய தாயகம் என்பதனைக் குறிப்பாக தமிழ் மக்களுக்குள்ள சமத்துவமான உரிமை, முஸ்லிம் மக்களுக்கும் உண்டு என்பதனை புலிகளது தலைமை வெளிப்படுத்தியிருந்தது' என்றார்.
மேலும், 'முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்காக 2002ஆம் ஆண்டில் பகிரங்கமான மன்னிப்புக்கோரியுள்ள புலிகள், முஸ்லிம்களை மீண்டும் வடக்கில் வந்து மீளக்குடியமறுமாறும் அழைத்திருந்தனர்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
3 hours ago