2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மக்களை முந்திய திருடர்கள்

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு முன்னராக அங்கிருக்கும் பொருட்களை திருடுவதற்காக செல்லுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக கடந்த 25 வருடங்களாக இருந்த வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு காணிகள் செவ்வாய்க்கிழமை (29), இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு முன்னர், அங்கு செல்லும் சிலர் அங்குள்ள இரும்புப் பொருட்கள், வீடுகளில் எஞ்சியுள்ள பொருட்களை திருடுகின்றனர்.

இதேவேளை, மக்கள் தங்கள் காணிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் முன்னிலையில் அங்குள்ள பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இவர்கள் வீடுகளின் தீராந்திகளையும் விட்டு வைக்காமல் எடுத்துச் செல்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X