2025 மே 19, திங்கட்கிழமை

மகனை கடித்துக்குதறிய தந்தை

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 21 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் தந்தை தனது 5 வயது மகனை கொடூரமாக கடித்து குதறிய நிலையில், தந்தையிடமிருந்து சிறுவன் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.இணுவில் பகுதியில் நேற்று (20) இரவு நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று (20) இரவு அதிக மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை தனது 5 வயது மகனை கொடூரமாக கடித்து குதறியுள்ளார். அதனால் சிறுவனின் கை, முதுகு, முகம் ஆகிய பகுதிகளில் கடுமையான கடி காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

அந்நிலையில் உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தந்தையை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X