2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மகளைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 ஜனவரி 18 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட பகுதியில் தனது பதின்ம வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான தந்தையை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பிலேயே தந்தை, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பெற்றோரைப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஒரு வருடமாக சிறுமி பராமரித்து வந்த உறவினர்கள் பொருளாதார நிலை காரணமாக அண்மையில் விடுதி ஒன்றில் சேர்ப்பித்திருந்தனர்.

அதன்போது, சிறுமி தனக்கு நடந்த விடயங்களை விடுதிக்குப் பொறுப்பாளருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, விடுதியின் நிர்வாகத்தினரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றம் சாட்டப்பட்ட தந்தை கைதுசெய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X