2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

மகளுக்கு நஞ்சு கலந்து உணவூட்டிய தந்தை மாயம்

Simrith   / 2025 மே 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 

6 வயதான சிறுமி  உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியதையடுத்து குடும்பத்தினர் சிறுமியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சிறுமிக்கு நஞ்சை உணவில் கலந்து ஊட்டிய தந்தை சம்பவத்தையடுத்து தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X