2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மகாத்மா காந்தியின் 74ஆவது சிரார்த்த தினம்

Editorial   / 2022 ஜனவரி 30 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

மகாத்மா காந்தியின் 74ஆவது சிரார்த்த தினம், யாழ். போதனா வைத்தியசாலை முன்றலிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இன்று (30) காலை நடைபெற்றது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்தியத் துணை தூதரகம் ஆகியன இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகையும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

காந்தியம் பத்திரிகை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வி விக்னேஸ்வரனால் இப்பத்திரிகை வெளியிடப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .