Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
1980களில் மகாவலி சட்டத்தின் கீழ் மகாவலியிலிருந்து நீர் வருவதற்கு முன்னமே ஏற்படுத்தப்பட்ட, “எல்” திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், தற்போது இந்தத் திட்டத்துக்கு மீள உயிரூட்டம் கொடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து மக்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்தும் திட்டங்கள் இடம்பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதையும் ஜனாதிபதியின் கவனத்துக்கு சம்பந்தன் கொண்டு வந்தார்.
இத்திட்டமானது வேறு மாவட்டங்களிலிருந்து மக்களைக் கொண்டு வந்து குடியமர்த்திய வெலி ஓயா அல்லது மணலாறு திட்டம் எனவும் பின்னர் ஏற்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் இத்திட்டம் நிறுத்தப்பட்டதனையும் சுட்டிக்காட்டிய சம்பந்தன், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளி இடங்களிலிருந்து மக்களைக் கொண்டு வந்து இந்தப் பிரதேசங்களில் குடியமர்த்திய திட்டங்களையும் எடுத்துக்கூறினார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றது.
இந்தச் செயலணியில் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ள விடயங்கள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு, கிழக்கிலுள்ள 18 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சார்ந்தவர்கள் எனவும், வடக்கு, கிழக்கிலுள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதனையும் சுட்டிக்காட்டிய அதேவேளை, வடக்கு, கிழக்கு மக்களினது ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் தமிழ் மக்கள் யுத்தத்தின் அழிவுகளால் மிகவும் பாதகமான விளைவுகளை சந்தித்துள்ளார்கள் என்பதனையும் எடுத்துக் கூறினார்
இதன்போது ஜனாதிபதி, “தனது அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் இராணுவத்தின் வசமிருந்த 88 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் வாழ்ந்த பயிர் செய்த நிலங்கள் இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை எடுத்துக்காட்டிய சம்பந்தன், இதற்கு சிறந்த உதாரணம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபிலவு, இங்கே, பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வந்த 75 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை சுட்டிக்காட்டினார்.
மேலும் நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்படவேண்டுமேயாகில் இராணுவத்தின் வசமுள்ள அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டுமென சம்பந்தன் இதன்போது வலியுறுத்தினார்.
மேலும், தமிழ் மக்கள் வன பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்ற திணைக்களங்களின் செயற்பாடுகளால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதனை சுட்டிக்காட்டிய சம்பந்தன், யுத்தத்தின் நிமித்தம் பல தசாப்தங்களுக்கு மேலாக தமது இடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள், தற்போது இந்த காணிகள் காடுகளாக வளர்ந்துள்ளன, இந்த சந்தர்ப்பத்தில் வன பாதுகாப்பு மற்றும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களங்கள் எல்லைக்கற்களை பதித்து இக்காணிகளை கைவசப்படுத்துகின்றமை
யையையும் கவனத்துக்குக் கொண்டு வந்தார். மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் அமைவதனையும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் மக்களுக்கு அவர்கள் வசமுள்ள காணிகளுக்கு பல தசாப்தங்களாக அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமையை சுட்டிக்காட்டிய சம்பந்தன், மேற்குறித்த பிரச்சினையை கையாண்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மேற்குறிப்பிடப்பட்ட மூன்று திணைக்களங்களின் பிரதானிகள், காணி ஆணையாளர் மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வொன்றை மிக விரைவாக ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமது காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் தமது காணிகளை அபிவிருத்தி செய்துகொள்ளும் வகையில் கிடைக்கப்பெறும் எந்தவொரு சலுகைகளையும் பெற முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய சம்பந்தன், இந்தப் பிரச்சினை விரைவாகத் தீர்க்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என்பதனை வலியுறுத்திய சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் நல்லிணக்கத்தையோ தேசிய ஒருமைப்பாட்டையோ ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்திய இரா சம்பந்தன் வெளியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர் கொண்டுவரப்படும் பட்சத்தில், நீர்ப்பாசன வசதியற்ற முல்லைத்தீவு மாவட்டம் நீர்ப்பாசன வசதிகளைப் பெறுவது மட்டுமல்லாது காணிகளை உடைய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் அம்மாவட்ட மக்கள் அத்தகைய திட்டத்தின் பயனாளிகளாக இருக்க வேண்டும் என்பதோடு, காணி இல்லாத அரச காணிகளைப் பெற்றுக்கொள்ள தகுதியுடைய முல்லைத்தீவு மாவட்ட மக்களும் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். உடனடியாக அதிகாரிகளைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஜனாதிபதி, அத்தகைய திட்டங்கள் இடம்பெறாது என்றும் தாம் நேரடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு குறிப்பிட்ட பிரதேசங்களுக்குச் சென்று சரியான நிலைமையை உறுதிப்படுத்துவேன் எனவும் உறுதியளித்தார்.
தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்டுகின்றமையானது நல்லிணக்கத்தையோ ஒருமைப்பாட்டையோ ஏற்படுத்த முடியாத ஒரு நிலைக்கு நாட்டை நகர்த்தும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வொன்று பிரிக்கப்படாத பிளவுபடாத இலங்கைக்குள் எட்டப்படுவதன் மூலமே இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025