2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘மக்களிடமே சலுகைகளை வழங்குவோம்’

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

சலுகைகளை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லையெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், பதவியால் கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் மக்களிடமே வழங்குவோமெனவும் கூறினார்.

வாகன வரிச் சலுகை அனுமதிப்பத்திரம் கிடைத்தால், அதனால் கிடைக்கும் நிதியையும் மக்களுக்கே வழங்குவோமெனவும், அவர் தெரிவித்தார்.

நல்லூரில், இன்று (17) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X