Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூன் 04 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்நிலை என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்வத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான முருகேசு சந்திரகுமார் மேற்கண்டவாறும் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம், வடமராட்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் நாட்டில் தமிழ் மக்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என்பதனை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது என்றார்.
மக்களால் தெரிவுச் செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் நாட்டில் சுந்திரமாக செயற்பட முடியாத சூழல் காணப்படுகிறது என்றால் அப்பாவி தமிழ் மக்களின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்? அவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள், என்பதனை சிந்தித்து பாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
தன்னுடைய மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை, பிரச்சினைகளை கேட்டறிவதற்கு கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்த நாட்டில் சுந்திரம் இல்லாத நிலைமை வடக்கு, கிழக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புக்கள், அச்சுறுத்தல்கள் என்பன யுத்தம் நிறைவுற்று 14 ஆண்டுகள் கடந்தும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் நிலையான சமாதானத்துக்கும் ஏற்புடையதல்ல. இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையே குரோதத்தை மென்மேலும் வளர்த்துக்கொண்டே செல்லும். எனவே, இச் சம்வபங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் மற்றும் அவரது செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago