2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘மக்களைக் காப்பாற்றவே ஊரடங்கு’

எம். றொசாந்த்   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நிலவும் ஆபத்தான நிலையில் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, ஊரடங்குச் சட்டம் போன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (17) வருகை தந்திருந்த அவர், பலாலி படைத் தலைமையகத்தில், முப்படை, பொலிஸார் மத்தியில் சிறப்புரையாற்றினார். இதன்பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்டு, மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், நோய் அறிகுறிகள் தென்பட்டால், எந்தவொரு அச்சமும் இன்றி, பரிசோதனைகைள முன்னெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தான், மாநாடு நடத்துவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவில்லை என்று கூறிய அவர், இக்கட்டான சூழ்நிலையில், இராணுவம், பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் அர்ப்பணிப்புடனான பணிகளைப் பாராட்டவே தான் இங்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

உலகளாவிய ரீதியிலுள்ள மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை மோசமான நிலையில் இல்லை என்றும் கொழும்பிலேயே அதிகளவானோர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் குறித்த கேள்விகளுக்கு தன்னாள் பதிலளிக்க முடியாது என்றும் ஆனால், தேசிய பாதுகாப்பு எனற் அடிப்படையில், மக்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தன்னிடம் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X