Mayu / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
யாழ்நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று (23) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்

யாழ் மானிப்பாய் காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக வந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.
இதன் போது முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

இதேவேளை, பட்டாரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்ததோடு வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டுள்ளார்
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
23 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
8 hours ago
9 hours ago