2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மணலேற்றி வந்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்: விபத்தில் மூவர் காயம்

Menaka Mookandi   / 2017 ஜனவரி 10 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், கே.மகா
பருத்தித்துறை சாரையடி பகுதியில் ஹயஸ் வாகனமும் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோதியதில்இ ஹயஸ் வாகனத்தில் வந்த மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக,பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், காயமடைந்த மூவரும் முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரையடி பகுதியின் உள் வீதி வழியாக மணல் ஏற்றி வந்திருந்த கனரக வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்காக, டயரை நோக்கி  பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது,  யாழ்.- பருத்தித்துறை (750) வீதி வழியாக வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கனரக வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் காயமடைந்தவர்களை மீட்ட பொலிஸார்,  பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளதுடன், கனரக வாகனத்தின்  சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் ஏனையோர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X