2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வை கட்டுப்படுத்த இராணுவ காலரண்

Editorial   / 2022 ஜனவரி 20 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த இராணுவ காவலரண்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வினால் மாவட்டம்  சவால்களை எதிர்கொண்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஆற்றுப்படுகையில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் அரசாங்க அதிபரின் பணிப்பின் கீழ், கிளிநொச்சி மாவட்ட   மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும்  பொலிஸார்  அடங்கிய குழுவினர், நேற்று (19)  நேரடியாக சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

இதன்போது  நிலைமைகளின் ஆபத்தை உணர்ந்துகொண்ட அதிகாரிகள், குறித்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த இராணுவ காலரணகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .