2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மணியந்தோட்டம் விவகாரம்; யாழுக்கு விரைகிறது கொழும்புக் குழு

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மணியந்தோட்டம், உதயபுரம் பகுதியில் இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளனர்.  

 இந்த குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மணியந் தோட்டம், உதயபுரம் பகுதியில், அடையாளம் தெரியாத சிலர், கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த இளைஞர் உயிரிழந்தார்.  

 துப்பாக்கிச் சூட்டைமேற்கொண்டது பொலிஸார் தான் என உயிரிழந்த இளைஞனுடன் வந்த நபர் தெரிவித்துள்ளதுடன், பொலிஸார் அதனை மேற்கொள்ளவில்லை என்று பொலிஸ் தரப்பு மறுப்புத் தெரிவித்து வருகின்றன.  

 இந்த நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை யார் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸ் தரப்பில் இருந்து வருவதுடன், முப்படை மீதும் விசாரணைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .