Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 மே 30 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண்ணை பெற்றுக்கொண்ட மக்கள், உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்து மண்ணை ஆய்வுக்கு உட்படுத்துமாறு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபுள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த விற்பனை நிலையத்தின் வளாகத்தில் உள்ள மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
பொது மக்கள் குறித்த மண்ணினை கொள்வனவு செய்து தமது வீடுகளில் கொட்டிய போது மனித எலும்புத்துண்டுகள் வெளி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட சிலர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த மண் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, மனித எலும்புகள் குறித்த மண்ணில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மனித எலும்புகள் மீட்கும் பரிசோதனைகள், அழைக்கப்பட்ட அதிகாரிகளின் கீழ் கட்டம் கட்டமாக இடம் பெற்று வருகின்றன.
மன்னார் நீதவானின் முன்னிலையில், அவரின் கட்டளைக்கு அமைவாக குறித்த அகழ்வு பணிகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றன.
எனவே குறித்த விற்பனை நிலையத்திலிருந்து மண்ணை பெற்றுக்கொண்ட மக்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, குறித்த மண்ணையும் ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago