2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மதத் தலைவர்களுடன் சந்திப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர்.

இதற்கமைய, முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான இந்தக் குழுவினர் யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

யாழ். ஆயர் இல்லத்தில், நேற்று காலை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஆயரிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட முன்னணியினர், சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர். 

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் சட்ட ஆலோசகர்களான கனகரட்னம் சுகாஷ் மற்றும் நடராசா காண்டிபன், கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

இதேவேளை நேற்றையதினம் நல்லை ஆதீனத்துக்குச் சென்ற மேற்படி முன்னணியின் குழுவினர், நல்லை ஆதீனக் குரு முதல்வரைச் சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டதுடன், சமகால நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X