Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் 3 ஆம் குறுக்குத் தெருவை சேர்ந்த தர்மசேகரம் வசீகரன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (02) வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியுள்ளார். மாலை தேநீர் வழங்குவதுக்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பிய போது அசைவற்று கிடந்துள்ளார்.
அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனாவைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும், திடீரென படுக்கையில் வலிப்பு நோய் ஏற்பட்டதால், சுவாசப்பைக்குள் உணவு பாதார்த்தம் அடைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த உயிரிழப்பு தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
45 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
9 hours ago