Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜனவரி 28 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - இளவாலை, பெரியவிளான் பகுதியில் மது போதையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தினால் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று வியாழக்கிழமை மாலை பெரிய விளான் சந்தியில் சுண்டல் விற்பனையை செய்துவிட்டு இரு இளைஞர்கள் தமது சுண்டல் வண்டியை வீடு நோக்கி தள்ளிச்சென்று கொண்டிருந்த நிலையில் அந்த பகுதியில் மதுபோதையில் வருகைதந்த இளைஞர் சுண்டல் வண்டியை தள்ளிச் சென்ற இளைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் இரு இளைஞர்களில் ஒருவர் கம்பியால் தாக்கிய நிலையில் குறித்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெள்ளிக்கிழமை தப்பித்து வந்த நிலையில், குறித்த இளைஞர் இன்று உடல்நிலை மோசமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
29 வயதுடைய புஷ்பராசா நிசாந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரழந்துள்ள நிலையில் இளவாலை பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை சந்தேகநபர்களாக கைது செய்துள்ளதாகவும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. R
29 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
4 hours ago