Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 23 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள்ளாக நடைபெறும் பொது நிகழ்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து அதுகுறித்தான முன்னெடுப்புகளை தன்னிச்சையாக மேற்கொண்டு வரும் மத்திய அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது வேதனையளிப்பதாக, வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ள 9 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது. இந்நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் ஏறக்குறைய நிறைவடையும் இத்தருணம் வரை, வட மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.
மக்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாகாண சபை நிர்வாகத்தை வேண்டுமென்றே புறக்கணித்து, மத்திய அரசின் நிர்வாக கட்டமைப்புகளினூடாக வடக்கில் பொது நிகழ்வுகளையும், அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதானது இலங்கை அரசின் திட்டமிட்ட சதியாகும். இதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் துணைபோவது வேதனையளிக்கின்றது.
தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்த நடவடிக்கையினை கண்டிக்கவோ தடுத்து நிறுத்தவோ அப்போதைய இந்திய அரசோ தொடர்ந்து வந்த அரசுகளோ ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்திருக்கவில்லை என்பது பெரும் குறையாகவே இன்றுவரை நீடித்து வருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை மக்களின் ஆதரவுடன் விடுதலைப் புலிகள் முன்னெடுத்து வந்த போது, மக்களிடம் இருந்து புலிகளை அந்நியப்படுத்தி பலவீனப்படுத்துவதுக்கு மேற்கொண்ட சதித்திட்டத்தின் நீட்சியாகவே தற்போதைய மாகாண சபையை புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளும் அமைந்துள்ளது.
மக்களால் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள்ளாக நடைபெறும் முன்னெடுப்புகளில், வட மாகாண சபையை புறந்தள்ளும் இலங்கை அரசின் இச்சதியில் இந்திய அரசும் மௌனமாக பங்கேற்பதானது, அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொண்டு, தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருவதன் மீதான ஐயப்பாட்டினை தமிழர்களிடையே ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago