2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மன்னாரில் கையெழுத்து வேட்டை

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை, மன்னாரில் மாபரும் கையெழுத்து வேட்டை இடம் பெறவுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவும் வடமாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களின் சங்கமும் இணைந்து சர்வதேச விசாரணையை கோரி வருகின்றோம்.

உள்ளக விசாரணைகளில் எவ்விதமான நம்பிக்கையும் இல்லை. ஆகவே, எங்களுக்கு சர்வதேச தரத்திலான ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரியிருந்தோம்.

சர்வதேச விசாரணையை வலுப்படுத்தும் முகமாக மன்னார் பிரஜைகள் குழுவும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையும் தமிழர் செயற்பாட்டுக்குழுவும் இணைந்து மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்க அருகில் காலை 10 மணியளவில் கையெழுத்து வேட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக அனைத்து மக்களும் கையெழுத்து வேட்டையில் கலந்து கொண்டு சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும். மக்களின் நீதிக்கான பயணத்துக்கு சர்வதேச விசாரணை ஒன்றுதான் நீதியை பெற்றுத்தர முடியும் என்ற நோக்கத்துடன் உங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .