Janu / 2025 நவம்பர் 10 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார்-யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராக வும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராக வும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (வயது 60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் திங்கட்கிழமை(10) காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.லெம்பேட்

1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago