2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

மனித புதைகுழி அகழ்வில் தாமதம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள காரணத்தால் யாழ்ப்பாணம் - செம்மணி, மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. 

சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதவான் கள விஜயத்தை மேற்கொண்டார். 

இதன்போது மனித புதைகுழி காணப்படும் பகுதி சதுப்பு நிலமாக உள்ளதை நீதவான் அவதானித்துள்ளார். 

இந்த நிலையில், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X