எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 ஜூலை 31 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்டத்தில், தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் மின் துண்டிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னாரில் வெள்ளிக்கிழமை (03) காலை 9.30 மணிக்கு, மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் பேரணி, மன்னார் மின்சார சபையில் ஆரம்பித்து, மன்னார் மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
மன்னார் மாவட்டத்தில், தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாணவர்களுக்குப் பரீட்சைகள் நெருங்கும் காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், கற்றல் நடவடிக்கைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இச்செயற்பாட்டைக் கண்டிக்கும் முகமாகவே, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. இப்பேரணியில், மன்னார் மக்களைக் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு, ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago