Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 மே 16 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து இன்று (16) மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டட விற்பனை நிலைய வளாகத்திலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரிலுள்ள பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு விற்கப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்படி கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் கொட்டப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்துக்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த விற்பனை நிலைய கட்டட நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று (15) முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர்,விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் கட்டட வளாகத்தில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது மேலும் பல மனித எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டன.
உடைக்கப்பட்ட குறித்த கட்டிட பகுதியில் அதிகளவான நீர் காணப்படுகின்றமையால் அகழ்வு பணிகள் இன்று (16) காலையுடன் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், மீண்டும் அகழ்வுப்பணிகள் நாளை (17) இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
42 minute ago
1 hours ago