Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 15 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தின் பகுதிகளை ஆழ, அகலம் ஆக்குதல் மற்றும் படகுகளை கட்டிவைக்க ஏற்றவாறு ஆழமாக்கி குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டமிடல் மற்றும் தொழில் செய்யும் மீனவர்கள் தங்குவதற்கான வசதி சிற்றுண்டிச்சாலை படகுகள் கட்டுவதற்கும் திரும்பிச் செல்வதற்கான பாதைகளை அமைத்தல் துறைமுகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கும் என டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த விடயம் தொடர்பான மாதிரி படம் காட்டப்பட்டு திட்ட முகாமையாளரால் அது தொடர்பிலேயே அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ். சிவஸ்ரீ அமைச்சின் செயலாளர்கள் நீரியல் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
18 minute ago
29 minute ago
36 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
36 minute ago
55 minute ago