2025 மே 17, சனிக்கிழமை

மயிலிட்டி துறைமுகம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

சுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட யாழ்.மயிலிட்டி துறைமுகம் இன்று (15) காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் நல்லாட்சி அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டதுடன் மக்களின் நீண்டகால கோரிக்கையான துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியற்றை திறந்து வைத்த பிரதமர், துறைமுக புனரமைப்பு நினைவு கல்லையும் இன்று (15) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மயிலிட்டி மக்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .