2025 மே 12, திங்கட்கிழமை

மயிலிட்டி மீன்பிடி இறங்குதுறைக்கு எரிபொருள் வழங்க ஏற்பாடு

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தைப் பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை, இன்று (20) கைச்சாத்திடப்பட்டது.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால், மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்ததுக்கும் இடையிலேயே, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நீண்டகாலமாக இருந்துவந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், தொழிலாளர்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, அத்துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு, பலநாள் மீன்பிடி கலங்கள் உள்ளிட்ட பல மீன்பிடிக் கலங்களை செயற்படுத்தி வந்த நிலையில், அங்கு எரிபொருள் நிரப்புவதில் சிக்கல் நிலை உருவாகியிருந்தது.

இந்நிலையில், இவ்விடயத்தை அத்துறைமுக நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றதையடுத்ததே, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையை, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் வடிவேலு சத்தியநாதன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் ஆகியோர் ​கைச்சாத்திட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X